காஞ்சிபுரம், நவ.25: காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராமன் என்பவரின் மனைவி செல்வி (65). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஏனாத்தூர் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கோ அவென்யூ அருகே சாலை வளைவில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, மூதாட்டி செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



