திருப்போரூர், நவ.25: திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தெமினா கிரானேப் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கிருபாகரன் வரவேற்றார். குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ராமச்சந்திரன் பங்கேற்று, குழந்தைகளின் உரிமைகள் குறித்து பேசினார். முடிவில் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
+
Advertisement



