திருப்போரூர், செப்.24: 10வது தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, திருப்போரூர் அரசு மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில், தேசிய ஆயுர்வேத தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்போரூர் அரசு மருத்துவமனை மருத்துவர் யுவராணி, தேசிய ஆயுர்வேத தின விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது, ஆயுர்வேத மருத்துவர் ஜெயதேவி, ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்கள், ஆயுர்வேத மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் `மண்ணுக்கும் மக்களுக்கும் ஆயுர்வேதம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
விழாவில், பங்கேற்று அனைத்து பொதுமக்களுக்கு அமிர்த்தோத்திர கஷாயம், சுக்கு மல்லி காபி, சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்வில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மருந்தாளுநர் இன்பமணி நன்றி கூறினார். முன்னதாக, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் குறித்தும், மழை கால நோய்களுக்கான ஆயுர்வேத மருத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், ஆயுர்வேத மருத்துவம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பள்ளிக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.