செங்கல்பட்டு, செப்.22:அரியானாவில் தேசிய அளவில் 11.9.2025 முதல் 15.9.2025 வரை பள்ளிகளுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டம், நென்மேலியில் உள்ள ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளி மாணவர்கள் ஹரிவிஷால் தங்கப்பதக்கமும், மாணவன் தர்ஷன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
இதில், தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ஹரிவிஷால், மத்தியப்பிரதேசத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்தியாவின் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தும் குத்துசண்டை முதன்மைப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அப்பள்ளயின் பயிற்சியாளர் ரெமோ, பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன், பள்ளியின் துணைத்தலைவர்கள் பிரவின், லிஜிஷா பிரவின் மற்றும் முதல்வர் சங்கரநாராயணன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.