துரைப்பாக்கம், ஆக.22: செம்மஞ்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் 960க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியில் சிலர் கூறுகின்றனர். அதனால், எங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் என சில பெற்றோர் பள்ளி முன் குவிந்தனர். இதுபற்றி பள்ளி நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது.
+
Advertisement