மதுராந்தகம், செப்.19: மதுராந்தகம் ஒன்றியம் அவுரிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஜல்லிமேடு கிராமத்தில் ராட்டின கிணறு தெருவின் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இது கடந்த ஓராண்டிற்கும் மேலாக உடைந்து, சிதிலமடைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. இது சம்பந்தமாக ஜமீன் எண்டத்தூர் மின் வாரிய அலுவலகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் மின் கம்பம் மாற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவின் ஓரம் உள்ள இந்த உடைந்த மின் கம்பத்தை மாற்றி விபத்து ஏற்படாமல் தடுக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement