மதுராந்தகம், அக்.18: மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாம்பட்டு பகுதியை சேர்ந்த சிவா(எ) சிவநேசன்(22), பாரூக்(26), மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22), மேலவலம் பேட்டை பகுதியை சேர்ந்த சேது(எ) சேதுராமன்(27) ஆகிய நான்கு பேர் மீதும் படாளம், மதுராந்தகம் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, பணம் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சிவநேசன், பாரூக், சஞ்சய், சேதுராமன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத், கலெக்டர் சினேகாவிற்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
+
Advertisement

