மாமல்லபுரம், செப்.18:ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை உலகம் முழுவதும் தூய்மை வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஒரு வாரம் கடற்கரையை தூய்மை படுத்துவது, குப்பையில்லா கடற்கரையை உருவாக்குவது, குப்பைகள் கொட்டாமல் இருக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், உலக தூய்மை வாரத்தையொட்டி, பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்து மாமல்லபுரம் நகராட்சி ஊழியர்கள், கிழக்கு கடற்கரை சாலையொட்டி உள்ள தனியார் ரிசார்ட் ஊழியர்கள் ஒன்றிணைந்து மாமல்லபுரம் கடற்கரையில் ஆங்காங்கே சிதறி கிடந்த தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதம் உள்ள பல்வேறு குப்பைகளை டன் கணக்கில் சேகரித்தனர். தொடர்ந்து, சேகரித்த குப்பைகளை நகராட்சி ஊழியர்களிடம் தனியார் ரிசார்ட் ஊழியர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கடற்கரையில் கண் மூடித்தனமாக குப்பைகளை வீசி விட்டு செல்லாமல், ஆங்காங்கே உள்ள குப்பை தொட்டிகளில் போட்டு கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
+
Advertisement