சோழிங்கநல்லூர், அக்.17: தீபாவளிக்கு புத்தாடை வாங்கித் தராததால் சாணம் பவுடரை சாப்பிட்டு மயங்கிய 14 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிமேடு சிங்காரவேலர் நகர் பள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி, தீபாவளியை முன்னிட்டு, புத்தாடை வாங்கித் தரும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் எடுத்து கொடுக்காததால் மனமுடைந்து, வீட்டில் இருந்த சாணம் பவுடரை சாப்பிட்டுள்ளார். இதனால், வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காசிமேடு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement