செங்கல்பட்டு, செப்.17: செங்கல்பட்டு அருகே 7,000 கிலோ கஞ்சா, அபின் உள்ளிட்ட உயர்ரக போதை பொருட்களை போலீசார் எரித்து அழித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜிஜே மல்டிகிளேவ் என்னும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் கஞ்சா உள்ள உயர்ரக போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் படி எரித்து அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சார்பில், கஞ்சா உள்ளிட்ட இரண்டாயிரம் கிலோ போதை பொருட்களும், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஐந்தாயிரம் கிலோ எடையுள்ள கஞ்சா, கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லேட், அபின், மெத்தபட்டமைன் உள்ளிட்ட உயர் ரக போதை பொருட்கள் எரித்து அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சார்பில் எஸ்பி அரவிந்தன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அழிக்கும் பணிகளை ஐ.ஜி செந்தில்குமாரி தொடங்கி வைத்தார்.
+
Advertisement