மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39வது ஆண்டு அமைப்பு தின விழா அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விழாவையொட்டி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சங்க கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தலைவர் தசரதன், செயலாளர் தயாநிதி, பொருளாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், தணிக்கையாளர் நாராயணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமரன், சீனிவாசன், கிளை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.