காஞ்சிபுரம், ஆக.15: காஞ்சிபுரம் அடுத்து காலூர், பஜனைகோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (51). இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய டூவீலரில் காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, குருவிமலை பாலாறு மேம்பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த முருகனை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக பலியானார். மாகறல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement