சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் கல்வி, பாதுகாப்பு, குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: சர்வதேச பெண்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் கல்வி, பாதுகாப்பு, குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காஞ்சிபுரம் அடுத்த குண்டுகுளம் பழங்குடியினர் பகுதியில் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த குண்டுகுளம் மூவேந்தர் நகர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் கண்காணிப்பகம் நிறுவனம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் இயக்குனர் ராஜி தலைமை தாங்கினார்.
நெற்களம் பெண்கள் கூட்டமைப்பின் பெறுப்பாளர்கள் மல்லிகா மற்றும் சரோஜா முன்னிலை வகித்தனர். இந் நிகழ்ச்சியில், அனைத்து பெண் குழந்தைகளையும், உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும் பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பாலின சமத்துவம் குறித்து பள்ளிகளில் பயிற்சி அளிக்க வேண்டும்.பெண் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை சம கல்வி வழங்கி மேம்படுத்து வேண்டும்.
குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறைக்கு, பள்ளி இடையில் நிற்றலை முற்றிலும் தடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் நல வாழ்வை பெண் குழந்தைகளுக்கு உறுதி செய்வோம், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவை வலுப்படுத்த வேண்டும் என பல்வேறு உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது. மேலும், கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு துண்டரிக்கைகள் வழங்கப்பட்டன. இதில் குழந்தைகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் குணசுந்தரி, சங்கரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில், துர்கா நன்றி கூறினார்.