மதுராந்தகம்: கோழியாளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இ சேவை மையம் அருகில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஒன்றிய செயலாளர் தம்பு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளையும் வழங்கி முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மாலதி, கவுன்சிலர் சிவபெருமான், ஒன்றிய துணை செயலாளர் வேதாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.