Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சேறும் சகதியுமாக மாறிய சாலை: பொதுமக்கள் கடும் அவதி

காஞ்சிபுரம், செப்.12: காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சேறம், சகதியுமாக மாறிய சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 44வது வார்டு, வேதாச்சலம் நகர் பகுதியில் புதைவடிகால் திட்ட பணி கடந்த 7ம்தேதி தொடங்கப்பட்டது. இந்த, திட்டப்பணிகள் முழுமையடையாத நிலையில், வேதாச்சலம் நகரில் பாரதிதாசன் தெரு, திலகர் தெரு உள்ளிட்ட சாலைகள் சேரும், சகதியுமாக மாறியுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள அவல நிலையில் உள்ளது. மேலும், பாரதியார் தெருவில் தோண்டப்பட்ட பள்ளத்தால் சிறுமழை பெய்தால் கூட, குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. செல்வ விநாயகர் கோயில் தெரு சாலையும் சேதமடைந்துள்ளது.

வேதாச்சல நகர் பகுதியில் இருந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமித்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில், மழலையர் பள்ளிக்கு செல்லும் ஒருசில குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என அப்பகுதி பெற்றோர் தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது அவ்வாழியாக செல்லும் வாகனங்கள் சேற்றை வாரி இரைப்பதால் உடைகள் நனைந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் மீண்டும் வீடுகளுக்கு செல்லும் அவலநிலை அப்பகுதியில் காணப்படுகிறது.

இதோபோல், அரசு, தனியார் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துடனே வேலைக்கு சென்று வீடு திரும்ப வேண்டி நிலை காணப்படுகிறது. மாலையில் வீடு திரும்பும்போது சேற்றில் விழுந்து எழுந்து திரும்ப வேண்டிய நிலையும் உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வேதாச்சலம் நகர் பகுதியில் சேறும், சகதியுமான சாலைகளை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியிருப்புவாசிகள் கோரிக்கை

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது என பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ள வில்லை. அதனால், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தருமாறு வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். இதன் பிறகாவதாக, எங்கள் பகுதி சாலைகள் சீரமைக்கப்படும் என நம்புகிறோம் என வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புலம்புகின்றனர்.