சோழிங்கநல்லூர் செப்.12: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 17ம் தேதி வடபழனியை சேர்ந்த சுரேஷ்குமார் பாட்டி மற்றும் செந்தில் ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சென்னை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த ஏகன் (39), தீபக் ஜெயின் (42) ஆகிய 2 பேர் எங்கள் நிதி நிறுவனத்தில் கூட்டு ஒப்பந்த மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.7 கோடி கடன் பெற்றனர். ஆனால் சொன்னப்படி இருவரும் மருத்துவ உபகரணங்கள் வாங்காமல் பணத்தை வேறு பணிக்கு செல்வு செய்துள்ளனர். அதோடு இல்லாமல் வாங்கி கடனையும் திரும்ப கட்டவில்லை. எனவே இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
அந்த 2 புகார்கள் மீது போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஏகன் மற்றும் தீபக் ஜெயின் ஆகியோர் திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் நிதி நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் மூலம் ரூ.7 கோடி கடன் பெற்று அதை இருவரும் பிரித்து மோசடி செய்தது உறுதியானது.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏகன் மற்றும் தீபக் ஜெயின் ஆகியோரை கடந்த 9ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.