உத்திரமேரூர், அக்.11: உத்திரமேரூர் அடுத்த, காவனூர் புதுச்சேரி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவனூர்புதுச்சேரி, பாரதிபுரம், சோழனூர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. புகாரின் பேரில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள்வனிதா தலைமையில், உதவி மேளாளர் சுந்தரவடிவேல், கண்காணிப்பாளர் ஆனந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காவனூர்புதுச்சேரி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கொள்முதல் நிலையத்திற்கு நெல் ஏற்றி வந்த லாரி ஒன்றினை பிடித்து விசாரணை செய்த போது வியாபாரிகள் நெல்முட்டைகள் என தெரியவந்தது. உடனே தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக குழுவினர்கள் 190 நெல் மூட்டைகள் கொண்ட அந்த வியாபாரியின் லாரியினை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது யாருடையது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
+
Advertisement