காஞ்சிபுரம் ஒன்றியம் கருப்படிதட்டடை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்பு
காஞ்சிபுரம்,அக்.11: தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன்படி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்டமாக செப்டம்பர் 16 முதல் அக்டோபர் வரை 68 முகாம்கள் நடைபெறுகின்றன.
இம்முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தபடுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில், காஞ்சிபுரம் ஒன்றியம் கருப்படிதட்டடை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பொன்னா வெங்கடேசன் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தலைமை தாங்கினார்.
இதில், நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு செய்தபோது விவசாயி பயனாளி ஒருவர் தனக்கு விவசாய பயன்பாட்டு மானிய விலையில் கருவியை வாங்குவதற்காக வேளாண்மை துறை அலுவலர்களை நாடிய போது உரிய ஆவணங்கள் இருந்தும் வேளாண்மை அதிகாரிகள் முகாமில் கலந்து கொள்ளாததை கண்டு சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் நேரில் வந்த விவசாய அலுவலர் விவசாயிக்கு தகுந்த உபகரணங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததின் பெயரில் விவசாயியின் குறையை நேரில் அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்த்து வைத்ததால் விவசாயிகள் தங்களது நன்றியினை தெரிவித்தனர். இம்முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயவர்மன் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, சாந்தி, துணை தலைவர் சத்யா புகழேந்தி, வார்டு உறுப்பினர் லோகு, திமுக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், மணி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.