குன்றத்தூர்,அக்.10: அகில இந்திய கால்பந்து பெடரேஷன் சார்பில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான யூத் லீக் கால்பந்து போட்டி நேற்று குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அம்பேத்கர் திடல் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில், சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட கிளப் அணி மற்றும் கால்பந்து பிளஸ் கிளப் அணியுடன் தகுதி சுற்று போட்டியில் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில், சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட அணி, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு போட்டிக்கு முன்னேறியது. இதில், சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட அணி வீரர் தரணி வேந்தன் 5 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதேபோல், இந்த கால்பந்தாட்ட மைதானத்தில், 13 மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட தகுதிச் சுற்று போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட அணியின் தலைவரும், சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்து வருகிறது.
+
Advertisement