Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு: மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம், செப்.10: காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிக்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வட்ட, கிளை, பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கலைஞர் நூலகம் திறப்பு விழா, அரசு சார்பில் பல்லாயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக காஞ்சிபுரம் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் பல்லாயிரக்கணக்கான திமுக கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் இந்த விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாநகரின் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணா இல்லத்திற்கு சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆர்.காந்தி, உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பொன்னேரிக்கரை அருகே நடைபெற்ற காஞ்சிபுரம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மலர்மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகுமார், ராஜேந்திரன், எழிலரசி சுந்தரமூர்த்தி,

மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், குமணன், கண்ணன், தம்பு, சத்தியசாய், சிவக்குமார், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு, ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திக் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், மோகன்தாஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவராமன், ராஜாராமகிருஷ்ணன், ஜெயலட்சுமி யுவராஜ், மாலதி ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புருஷோத்தமன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.