திருப்போரூர், அக்.9: திருப்போரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு பகுதியில் பஞ்சமி நிலமீட்பு போராட்டத்தில் உயிரிழந்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி (10ம்தேதி) நாளை மாமல்லபுரம் அருகே காரணையில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சிறை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திருப்போரூரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கேது தென்னவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.