திருப்போரூர், அக்.9: திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம், மடையத்தூர், செம்பாக்கம், கொட்டமேடு கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கையை பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அருள்ராணி, பொருளாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.