மதுராந்தகம், ஆக.9: கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஆடி மாத பவுர்ணமி தரிசன விழா மற்றும் பவுர்ணமி பூஜை ஆகியவை நடந்தன. மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஆடி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 11 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 136வது பவுர்ணமி தரிசன விழா நேற்று நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சேஷ பீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் ஓம் நமச்சிவாய மந்திர உச்சரிப்புடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியை பெற்றனர். இதையடுத்து மக்கள் சுபிசமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது. ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜையும் செய்து மகாதீபாரதனையினை பக்தர்களுக்களுக்கு காண்பித்தார். இதில், கல்வித்துறையின் முன்னாள் இணை இயக்குனர் பொன்னம்பலம், தொழிலதிபர் தனலட்சுமி ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். பக்தர்கள் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவ ஏழுமலைதாசன் செய்திருந்தார்.
+
Advertisement