செங்கல்பட்டு, டிச.8: கல்பாக்கம் அணுசக்திதுறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் சார்பில் நிதி வழங்கும் விழா செங்கல்பட்டில் நேற்று நடந்தது. இதில் கல்பாக்கம் அணுசக்தி துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 2024-2025ம் ஆண்டு ஈட்டிய லாபத்தொகையில் இருந்து, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்தவேண்டிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிநிதி, கூட்டுறவு கல்விநிதி,
உறுப்பினர் ஆண்டுசந்தா மற்றும் கூட்டுறவு இதழ்கள் சந்தா தொகை ரூ.41.18 லட்சத்துக்கான காசோலையை சங்கத்தின் செயலாளர் திருமுருகன் மற்றும் உதவிசெயலாளர் கணேசன் ஆகியோர் செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமாரிடம் வழங்கினர்.
நிகழ்வின்போது செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர், அலுவலக கண்காணிப்பாளர்கள் வேலு, வேணுகோபால், மகேந்திரபாபு மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.


