குன்றத்தூர், நவ.7: குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர், திடீரென சட்டை பையில் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் இரும்பு கம்பியை எடுத்து, தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதில், கழுத்து அறுபட்டு ரத்தம் அதிகளவில் கொட்டத் தொடங்கியது. இதனைக்கண்டதும் பேருந்திற்காக காத்திருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார், வாலிபரை சமாதானம் செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் பெயர் ஆகாஷ் என்பது தெரிய வந்தது.
+
Advertisement
