செங்கல்பட்டு, டிச.5: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 அடி தூரத்திற்கு இடிந்து கீழே விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தது இரவு நேரம் என்பதால் மாணவர்கள் அங்கே இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் முழுவதும் விரிசல் ஏற்பட்டு பலத்த சேதமடைந்து காணப்படுவதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மீதம் உள்ள சுவரை அகற்றிவிட்டு மாணவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, புதிய சுற்றுசுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
+
Advertisement

