மதுராந்தகம், அக்.4: அச் சிறுப்பாக்கத்தில் இன்று மழைமலை மாதா தேர் திருவிழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலை குன்றின் அடிவாரத்தில மழைமலை மாதா அருள்தலம் உள்ளது.
இந்த அருள் தலத்திற்கு ஏராளமான கிறிஸ்தவர்களும் சுற்றுலா பயணிகளும் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்த அருள் தளத்தின் 57ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அதில், அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இருந்து கொடியினை ஏராளமான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக மழை மலை மாதா அருள் தலத்திற்கு கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து கொடி மரத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும், இன்று மாலை 6 மணி அளவில் மழை மாதாவின் தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருள் தல அதிபர் சின்னப்பர் செய்துள்ளார்.