மதுராந்தகம், அக்.4: மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட சிலாவட்டம், பாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சி மக்களும் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி நேற்று சிலாவட்டம் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர் ஆலோசனைப்படி நடைபெற்றது. இதில், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சிவகுமார் தலைமை தாங்கி முகாம்களில் பங்கு பெற்ற பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, பாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலாவட்டம் பானுமதி பாலு, பாக்கம் அமுல், மாவட்ட கவுன்சிலர் ராஜாராமகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் குமார், மாவட்ட விவசாய அணி நிர்வாகி கிணார் அரசு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் இளங்கோ, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செந்தில்நாதன், நிர்வாகிகள் ராஜா, நரேந்திரன், சக்திவேல், சீனிவாசன், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் நிர்மலா ராஜன், எல்லப்பன், செயலர்கள் ராஜசேகர், சரவணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நிலப்பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஊரக வளர்ச்சி மூலம் வீடுகள் கேட்பு, மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.