Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: டிஐஜி தேவராணி உத்தரவு

காஞ்சிபுரம், நவ.28: காஞ்சிபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி தேவராணி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட சரக டிஐஜி தேவராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுருகன், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டராகவும், மதுராந்தகம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பரந்தாமன், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் இன்ஸ்பெக்டராகவும், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய விநாயகம், காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டராகவும், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வடிவேல் முருகன், கவரப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், ஆரம்பாக்கம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜவஹர் குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவக்குமார், மதுராந்தகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தேன்மொழி, மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், காஞ்சிபுரம் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வடிவுக்கரசி, திருவள்ளூர் நிர்வாகப்பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மாமல்லபுரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், மகாலிங்கம், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் இன்ஸ்பெக்டராகவும், பொற்பாதம், திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் இன்ஸ்பெக்டராகவும், கார்த்திக் ஆரம்பாக்கம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும், சதீஷ், செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சந்தோஷ்குமார் திருவள்ளூர் மாவட்டம், கே.கே.சத்திரம் இன்ஸ்பெக்டராகவும், சுரேஷ்பாண்டியன் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு இன்ஸ்பெக்டராகவும், விமலநாதன், திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், கோமளா. செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயலட்சுமி, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், முத்துக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.