காஞ்சிபுரம், ஆக. 3: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் குறை கேட்பு முகாம்களில் பெறப்பட்ட 2,430 மனுக்களை, கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழிலரசன் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகரம், காஞ்சிபுரம் ஒன்றியம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 9ம் தேதி வரை சட்டமன்ற உறுப்பினர் மக்கள் குறைகேட்பு முகாம்கள் நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து 2430 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிலையில், மக்கள் குறைகேட்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் நேற்று வழங்கினார்.
அப்போது, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். மேலும், சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் குறை கேட்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வேண்டி வழங்கிய மனுக்கள், மாவட்ட கலெக்டர் பட்டா வழங்கக்கூடிய மனுக்கள், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டும் 166 மனுக்களும், காஞ்சிபுரம் ஒன்றிய பகுதிகளில் 458 மனுக்களும், வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் 293 மனுக்களும் என மொத்தம் 917 மனுக்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், வீட்டுமனை வழங்க கோரி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 191 மனுக்களும், காஞ்சிபுரம் ஒன்றிய பகுதிகளில் 168 மனுக்களும், வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் 159 மனுக்களும் என மொத்தம் 518 மனுக்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டா திருத்தம் செய்யப்படும் 36 மனுக்களும், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமைக்கு பரிந்துரைக்கப்பட்டதில், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 206 மனுக்களும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 89 மனுக்களும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 251 மனுக்களும், முதியோர், விதவை உதவித்தொகை மனுக்கள் 206 மற்றும் மின்சாரத்துறை மனுக்கள் 124, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மனுக்கள் 25, உணவு பொருள் வழங்கல் துறை மனுக்கள் 35, போக்குவரத்து துறை மனுக்கள் 4, பள்ளி கல்வித்துறை மனுக்கள் 11, நீர்வளத்துறை மனுக்கள் 8 உள்ளிட்ட பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 2,430 மனுக்களையும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.