ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுமான பணியின்போது, அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் வயரினை அப்புறப்படுத்த எடுத்துபோது, மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக பலியானார். விழுப்புரம் அருகே கந்தசிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (49). இவர், கட்டிட வேலை செய்யும் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில், படப்பை பகுதியில் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் நேற்று ஈடுபட்டு வந்தார். அப்போது, மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனைகண்ட ஜோதி, மின்சார வயரை அப்புறப்படுத்துவதற்காக வயரினை பிடித்தபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement