Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம்

செங்கல்பட்டு, ஆக. 5: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை 15 நாடகளுக்குள் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சார்-பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவானது, கடந்த 22/7/2025ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணை குழு கூட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்-பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தப்பட்டு வரைவு வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் (நிர்) மதிப்பீட்டு துணை குழு எண்.10, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு 603 002 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.