திருப்போரூர், ஆக.5: சென்னை அடையாறில் இருந்து திருப்போரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமம் வரை தடம் எண் 102 எக்ஸ் என்ற மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இது காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதில் மானாம்பதி, குண்ணப்பட்டு, சிறுதாவூர், ஆமூர், அகரம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் கிராமங்களில் இருந்து இந்த பேருந்து மூலமே சென்னையின் முக்கிய பகுதியை அடைவதற்கு இந்த பேருந்தை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, உயர்கல்வி பயில கல்லூரிகளுக்கு செல்வோர், சென்னை அரசு பொது மருத்துவமனை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு செல்வோரும், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செல்வோரும் இந்த பேருந்தை பயன்படுத்துகின்றனர்.
தற்போது, கணிசமாக மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இரு நடைகள் இயக்கப்படும் பேருந்தை நான்கு பேருந்துகள் மூலமாக 10 நடைகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே, மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து இந்த தடத்தில் கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.