மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
தஞ்சாவூர்: வாய்க்கால்களை தூர்வாரி பணிகளில் முறைகேடு நடந்திருப்பாதாகவும் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் நீர்வளத் துறையில் தூர்வாரும் பணிகளில் முறைகேடு கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் கொடியரசு மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியதாவது: இந்த ஆண்டு தமிழக அரசு நீர்வள துறை மூலம் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகள் வாய்க்கால்களை தூர்வாரி பணிகளை செயல்படுத்தியது. ஆனால் கல்லணை கால்வாய் கூட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் பகுதியில் தூர்வாரும் பணிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதிலும் மதுக்கூர் நீர் வள பிரிவில் எஸ்டிஓஏஇ வாய்க்காலை வெட்டாமலேயே பணம் எடுத்து பல லட்சம் கையாடல் செய்துள்ளனர். இந்த வருடம் மதுக்கூர் பிரிவு அலுவலகத்தில் மற்றும் சுமார் 18 சேவைகள் நடந்துள்ளது.
இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல் சென்ற ஆண்டும் நடந்துள்ளது. இதனை கள ஆய்வு செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி செய்த அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுவிட்டது. உரிய காலத்தில் உரம் தெளித்தும் அந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மகசூல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.