நாகர்கோவில், ஜூலை 11: கல்வி மனித அடிப்படை உரிமை. ஆனால் சில ெபாறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் ரசீது இல்லாமல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கின்றனர். விடுதி கட்டணமும் அதிகம். இது மனித அடிப்படை உரிமை மீறலாகும். எனவே அரசு இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி நிலையங்கள் கட்டண வசூலை முறைப்படுத்த வலியுறுத்தி வடசேரி சந்திப்பில் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜாண் வின்சென்ட் ராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஜெகன், துணை செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை நிறுவன தலைவர் ஜெய்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பொது செயலாளர் வழக்கறிஞர் உஷா, கழக பேச்சாளர் அமலன், மாநில அமைப்பாளர் சார்லின், மாவட்ட துணை செயலாளர் ஸ்டீபன், லாசர் மணி, ஜெரோம்மகளிரணி மேரி ஸ்டெல்லா, அனிதா, ஷெர்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement