மன்னார்குடி, ஜூலை 11: மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கினைந்த பொது சுகாதார ஆய்வகத்தை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 354 படுக் கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோ யாளிகள் புற நோயாளிகளாகவும், 350 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோ யாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சராசரியாக மாதந்தோறும் 300-க்கும் மேற் பட்ட மகப்பேறு சிகிச்சைகள் 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பரிந்துரையின் பேரில் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஒருங்கினைந்த பொது சுகாதார ஆய்வகம் புதிதாக கட்டப்பட்டது. இந்த ஆய்வகத்தை திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கைலாசம், தலைமை மருத்துவர் விஜயகுமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.