நாமக்கல், ஜூலை 11: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முன்பு, பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, நேற்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். அனைத்து மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி பேராசிரியைகள் கோஷமிட்டனர்.
+
Advertisement