குளச்சல், ஜூலை 23: நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தை சேர்ந்தவர் விஷ்ணு (29). கூலி தொழிலாளி. அதே பகுதியில், பெற்றோர் பிரிந்து பிரிந்து சென்றதால், தாய் வழி பாட்டி வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கும் விஷ்ணுவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இந்தநிலையில் சிறுமி நேற்று முன் தினம் வயிறு வலிப்பதாக கூறியதையடுத்து மருத்துவமனைக்கு அவரது பாட்டி அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியிடம் பாட்டி விசாரித்துள்ளார். அப்போது, கடந்த மே மாதம் 15ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 2,4 ஆகிய தேதிகளில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி விஷ்ணு பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் பாட்டி புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் போக்சோ பிரிவில் விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.