Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

பெரம்பலூர், மே 17: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளிடம் அங்கு வழங்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து நேற்று நேரில் பார்வையிட்டு, தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வு மாணவ,மாணவிகளிடம் வினாக்கள் எழுப்பி விளக் கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கலெக்டர் கற்பகம் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுக ளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படை யில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடு நர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவசப் பயிற்சிவகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வாரத்தின் அனைத்து வேலை நாட்க ளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடத்தப்பட்டு வரு கின்றன. இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை மற்றும் Projector வசதியுடன் கூடிய வகுப்பறைகள், போட்டித்தேர்வுகளுக்கு தேவையான அனைத்து சமச்சீர், பாடப்புத்தகங்களு டன் கூடிய நூலகவசதி, வாராந்திர மாதிரி தேர்வு கள் பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் வரு கிற ஜூன் 9ம்தேதி அன்று நடைபெறவுள்ள போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவி கள் பயன்பெறும்வகையில் மாநில அளவிலான 5 கட்டணமில்லா முழு பாட மாதிரி தேர்வுகள் மேமாதம் 21, 24, 27, 30 மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களில் நடை பெறவுள்ளன. இந்த மாதி ரித்தேர்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள மாணவ, மாணவிகள் தங்களின் புகைப்படம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 விண்ணப்ப நகல்ஆகியவற்றுடன் தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாங்கள் படிக் கும் காலத்தில் இது போன்ற வசதிவாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஆனால் இன்று ஏராளமான கல்வி வாய்ப்புகளையும், உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும், உயர் கல்வியை முடித்தவர்கள் பணிக்கு செல்வதற்கு தேவையான தொழில் நெறி வழிகாட்டி பயிற்சி வகுப்புகளையும் தமிழக அரசு நடத்தி வருகின்றது. அனைத்து மாணவ, மாண விகளும் நல்ல முறையில் தேர்வு எழுதி அரசு அலுவ லர்களாக ஆக வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள் கிறேன் என கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.