நாசரேத், ஜூன் 19: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்தாய்வு கூடுகை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் பெரியநாயகம் ஜெயராஜ் அறிமுக உரையாற்றினார். கல்லூரி பாடகர் குழுவினர் இறைவணக்க பாடல் பாடினர். ஆங்கிலத் துறை தலைவர் வசந்தி, வேதப் பாடம் வாசித்தார். விலங்கியல் துறை தலைவர் செல்வராஜ் ஐசக், ஆரம்ப ஜெபம் செய்தார். பொருளியல் துறை தலைவர் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் கல்லூரி விதிகள், ஒழுங்கு முறை மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் குறித்தும், வரலாற்று துறை பேராசிரியர் சாமுவேல் தங்கராஜ் கோரேஸ் கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கான நலப்பணித்திட்டம் குறித்தும், உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங் ரோக்லென்ட் விளையாட்டு மற்றும் ஒழுக்கம் குறித்தும், கல்லூரி நூலகர் ஜாய் சோபினி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நூலகத்தை பயன்படுத்துவது குறித்தும் மாணவ- மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் பெற்றோர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை தலைவர் கிரேஸ்ஸின் ஜீலியானா நன்றி கூறினார். கணிதத்துறை தலைவர் அலிஸ் பாப்பா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியும், கல்லூரி செயலாளருமான ஜான் சந்தோஷம், செயலரின் உதவியாளர் ரமா, முதல்வர் ஜீவி எஸ்தர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
+
Advertisement