உளுந்தூர்பேட்டை, ஜூலை 15: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எல்லப்பநாயக்கன்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருபவர் ராஜீவ்காந்தி. நேற்று இவரது கரும்பு வயலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகள் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதமடைந்தன.
+
Advertisement