Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்

கோவை, ஜூன் 26: கோவை சுண்டாக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

இந்த சிகிச்சை 5 நிமிடத்தில் பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு இலவசமாக செய்யப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லை. இந்த சிகிச்சை பெறும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100 மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் ரூ.1,000, ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் மூலம் ரூ.1,000 என மொத்தம் ரூ.3,100 வழங்கப்படுகிறது.

சிகிச்சையால் இல்லற வாழ்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்கோ தடை இருக்காது. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையை விட பல மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியமில்லை. கூடுதல் தகவலுக்கு 80728-65541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.