Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் ேசர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

திருச்சி, ஜூலை 23: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் உறுப்பினராவதற்கான பிரதிநிதிகளுடனான விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா்கள் வழங்குவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரநிதிகளுடனான விளக்கக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவிகளை வழங்குவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஜூலை 1ம் தேதி தொடங்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கடைசி நாள் ஜூலை 17ம் தேதியாக இருந்தது. இதனை வரும் ஜூலை 31ம் தேதி நீட்டித்து வரை இதற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப மாதிரிகளை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வழங்கிடலாம்.

திருச்சி மாவட்டத்தில், இதுவரை நியமன உறுப்பினா் பதவிக்காக திருச்சி மாநகராட்சியில் 51 விண்ணப்பங்களும், 5 நகராட்சிகளில் 26 விண்ணப்பங்களும், 14 பேரூராட்சிகளில் 51 விண்ணப்பங்களும் என மொத்தம் 134 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரா்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களிடம், பேரூராட்சிக்கு செயல் அலுவலர்களிடமும் வரும் 31ம் தேதி மாலை 3 மணிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சா் அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி மாவட்ட அளவிலான குழுவானது நியமன உறுப்பினா் பதவிக்கு பெறப்பட்ட விண்ணப்ப http:/tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவாியில் வரும் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், மாற்றுத்திறனாளி உறுப்பினா் நியமனங்கள் தொடா்பாக தொிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படிமாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைத்து செயல்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்நியமனங்களை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பரமேஸ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரகநாத்சிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சசிகலா, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.