Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இளம்பெண்ணின் அரை நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்ட மாஜி கணவர்: சைபர் கிரைம் விசாரணை

புதுச்சேரி, மே 28: காரைக்கால் இளம்பெண்ணின் அரை நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்ட முன்னாள் கணவர் மீது வழக்குபதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கல்மண்டபம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க ஆன்லைனில் பெண்களை தேடி உள்ளார். அப்போது ஆன்லைனில் ஒரு தொலைபேசி எண் கிடைத்துள்ளது. உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டு பெண் உள்ளதா? என கேட்டுள்ளார்.

இதற்கு மர்ம நபர் பெண் இருக்கிறார்கள் என்று சில அழகிகளுடைய புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதில் இருக்கும் பெண்களுக்கு ஏற்றவாறு பணத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து வாலிபர் ஒரு போட்டோவை தேர்வு செய்துள்ளார். பின்னர், வாலிபர் தேர்வு செய்த போட்டோவிற்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளனர். அதன்படி வாலிபர் மர்ம நபருக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் புதுவை புதிய பேருந்து நிலைய அருகே பிரபல ஓட்டலுக்கு வரச்சொல்லி உள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபரும், ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர் ஓட்டல் அறைக்கு சென்று பார்த்தபோது, எந்த பெண்ணும் அங்கு இல்லை. உடனே அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, மர்ம நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதற்கிடையே காரைக்காலை சேர்ந்த இளம்பெண்ணின் அரை நிர்வாண புகைப்படங்களை, முன்னாள் கணவர் எக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது இன்துலா என்பவர் செல்போனில் உள்ள லோன் ஆப்பில் ரூ.18 ஆயிரம் கடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் மர்ம நபர் கடனுக்கான பணம் கொடுக்காமல், முகமது புகைப்படங்களை மார்பிங் செய்து பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளார். இணையதள மோசடியால் பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.