திருப்பூர், அக்.31: திருப்பூர் காந்தி நகர் அடுத்த பிரைம் என்கிளேவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (46). இவருடைய நண்பர் அஜய் அகர்வால் (44). இருவரும் கடந்த 29ம் தேதி ஓம்சக்தி கோவில் அருகே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வேகம் குறைவாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் ஸ்கூட்டரில் வந்த 3 பேர் சூர்யபிரகாஷின் கார் பின்புறம் மோதினர்கள்.தொடர்ந்து சூர்யபிரகாசும், அஜய் அகர்வாலும் இது குறித்து அந்த இளைஞர்களிடம் தட்டிகேட்டனர். அப்போது அந்த இளைஞர்கள் மூவரும் சூர்யபிரகாஷ், அஜய் அகர்வால் ஆகியோரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து சூர்யபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
  
  
  
   
