அந்தியூர்,அக்.31: அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி சம்பந்தமான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தாசில்தார் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஈரோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மை நலத்துறை (பொ) அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டார்.
இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களின் முழு விபரம், அந்தந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என முழுமையான விசாரணை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், வீடுவீடாக செல்லும் சிறப்பு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, கட்சிகளின் ஏஜென்ட்கள், இப்பணியில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில், அந்தியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் நாகேஸ்வரன்,பேரூர் செயலாளர் காளிதாஸ், அதிமுக சண்முகானந்தம், காங்., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
  
  
  
   
