ஈரோடு, செப்.30: கீழடி தமிழர் தாய்மடி, சனாதனப் புரட்டலுக்கு பேரிடி என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த ராமசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலர் தமிழ்ப்பிரியன் முன்னிலை வகித்தார். சூரியம்பாளையம் பகுதி திமுக அவைத் தலைவர் சண்முகப்பிரியன், மோகன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்தனர். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளருமான பவுசியா இக்பால், இதழியலாளர் தங்கதுரை, புரட்சிகர இளைஞர் முன்னணி செயப்பிரகாசம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி குரு நன்றி கூறினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
+
Advertisement