ஈரோடு, செப்.30: தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை சார்பில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி, குறித்த நேரத்தில் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் பத்திரப்பதிவு இணையதளம் நேற்று முடங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று காலை டோக்கன் பெற்றிருந்தவர்கள் பத்திரம் பதிவு செய்வதற்காக வந்திருந்தனர். ஆனால், இணையதளம் முடங்கியதால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். தினமும் சுமார் 40 பத்திரங்கள் பதிவு செய்யப்படும் இடத்தில் இணையதளம் முடங்கியதால் ஒரு பத்திரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பத்திரப்பதிவு பாதிப்பட்டது.
+
Advertisement