ஈரோடு, ஆக. 30: ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜீவரத்தினம் (28). தொழிலாளி. இவர் கடந்த 27ம் தேதி இரவு அவரது அண்ணனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25), பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், ஜீவரத்தினத்தை கீழே கிடந்த கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த ஜீவரத்தினம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசில் ஜீவரத்தினம் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.