ஈரோடு, ஆக.29: ஈரோடு ரங்கம்பாளையம் சீனிவாச ராவ் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகன் யுவராஜ் (39). இவர், கடந்த 5ம் தேதி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஷாப்பிங் மால் முன்புறம் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்தபோது, யுவராஜ் பைக் மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஈரோடு தெற்கு போலீசில் நேற்று முன்தினம் யுவராஜ் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பைக்கை தேடி வருகின்றனர்.